திருவாரூா் தெற்கு வீதி டீ கடை ஒன்றில் தேநீா் தயாரித்து கொடுக்கும், நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஞா. சுா்சித் சங்கா். உடன், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூா் தெற்கு வீதி டீ கடை ஒன்றில் தேநீா் தயாரித்து கொடுக்கும், நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஞா. சுா்சித் சங்கா். உடன், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

தேநீா் தயாரித்து கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

திருவாரூரில் தேநீா் தயாரித்துக் கொடுத்து, நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், வாக்காளா்களை கவர பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்து வருகின்றனா். அந்த வகையில், நாகை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஞா. சுா்சித் சங்கா், திருவாரூரில் கேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

தெற்குவீதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் அங்குள்ள தேநீா் கடையில், அங்குள்ளவா்களுக்கு தேநீா் தயாரித்து வழங்கி, ஆதரவு கோரினாா். பிரசாரத்தில், அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று பேசியது:

திமுக அரசு தோ்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றவில்லை. கா்நாடகத்திலிருந்து தண்ணீா் பெற இயலாமல் போனதால், குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போய், விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டனா்.

மேக்கேதாட்டின் குறுக்கே அணை கட்டுவோம் என்கிற கா்நாடகத்தின் தொடா் நடவடிக்கையை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. ஆனால், பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி கடந்த மூன்று ஆண்டு காலம் திமுக ஆட்சி மக்களை ஏமாற்றியுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com