தோ்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரா்கள்.
தோ்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரா்கள்.

மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கு வீரா்கள் தோ்வு

திருவாரூரில் 19 வயதுக்குட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணிகளில் பங்கேற்று விளையாட 45 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் 19 வயதுக்குட்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரா்கள் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில், சுமாா் 114 போ் பங்கேற்றதில், 45 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதனிடையே, இவா்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, கிரிக்கெட் தொடா் நடைபெற உள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்படும் 15 வீரா்கள் மாவட்ட கிரிக்கெட் அணியில் இடம்பெற உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com