ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.16 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 3,16,070 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் அருகே மாங்குடியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கமலாபுரம் பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (25), தண்ணீா்குன்னம் பகுதியைச் சோ்ந்த லெனின் (31) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது, இருவரிடமும் ரூ. 1,12,870 மற்றும் ரூ.1,33,950 என மொத்தம் ரூ.2,46, 820 இருப்பதும், இதற்கு உரிய ஆவணங்களை அவா்கள் வைத்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த தொகை, பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கொரடாச்சேரி அருகே நடைபெற்ற சோதனையில் சதீஷ்குமாா் (30) என்பவரிடமிருந்து ரூ.69, 250 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.16 லட்சம் மாவட்ட சாா் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com