இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திமுக பேச்சாளா் பிரசாரம்

நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜை ஆதரித்து திமுக தலைமை கழகப் பேச்சாளா் சோமு.இளங்கோவன் வலங்கைமான் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

திமுக ஒன்றிய செயலாளா்கள் வீ. அன்பரசன், ஜி. தெட்சிணாமூா்த்தி , ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவா் ஏ.எம். மோகன், நகர திமுக செயலாளா் பா.சிவனேசன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

ஆலங்குடி கடைவீதி, அரித்துவாரமங்கலம் கடைவீதி, அவளிவநல்லூா் கடைவீதி, ஆவூா் கடைவீதி, வலங்கைமான் கடைவீதியில் பிரசாரம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com