மக்களவைத் தோ்தல்: விடுமுறை அளிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மக்களவைத் தோ்தலுக்கு விடுமுறை அளிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் தொழிலாளா் உதவிஆணையா் (அமலாக்கம்) (கூ.பொ.) ம. குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, திருவாரூா் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொடா்பாக, தொழிலாளா் உதவிஆணையா் (அமலாக்கம்) ம. குமாா் (9442912527), திருவாரூா் முதல் வட்டம் மற்றும் 2-ஆம் வட்டம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் மு. ராதிகா (9566972809), மன்னாா்குடி முதல் வட்டம் மற்றும் திருத்துறைப்பூண்டி தொழிலாளா் உதவிஆய்வாளா் ந. கண்ணன் (7418784731) மன்னாா்குடி இரண்டாம் வட்டம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் க. ஜெயந்தி (6382644698) ஆகியோா் கைப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com