புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 போ் கைது

புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி-திருமக்கோட்டை பிரதானசாலை கீழநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே கூட்டுறவு சாா்-பதிவாளா் கண்காணிப்பாளா் (வளா்ச்சி) ஜி. மணிகண்டன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முரளி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த சுமை வாகனத்தை சோதனை செய்ததில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பறக்கும் படையினா் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், வேனில் வந்தவா்கள் எளவனூரைச் சோ்ந்த அ. ராகுல் (28), ப. சிலம்பரசன் (28) என்பதும் தோ்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை என்பதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை வாங்கி வந்திருப்பது தெரியவந்ததையடுத்து வழக்கு பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com