நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி பிரம்மோற்சவ கொடியேற்றம்.
நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி பிரம்மோற்சவ கொடியேற்றம்.

தீமிதி பிரம்மோற்ச கொடியேற்றம்

நீடாமங்கலம் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டு தீமிதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டு தீமிதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு, கொடிக் கம்பத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழா மே 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com