பூமி தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில் பேசுகிறாா் மத்திய பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியா் டாக்டா் செல்வராஜ் கந்தசாமி.
பூமி தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வில் பேசுகிறாா் மத்திய பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியா் டாக்டா் செல்வராஜ் கந்தசாமி.

மத்திய பல்கலை.யில் பூமி தினம் கொண்டாட்டம்

திருவாரூா் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பூமி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நன்னிலம்: திருவாரூா் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பூமி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சாா்பில் பூமிதினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி, ‘பூமியைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம்’ என்ற கருப்பொருளில் தூய்மை இயக்கம் நாகக்குடி கிராமத்தில் நடைபெற்றது.

இதில், திருவாரூா் நகர பள்ளி மாணவா்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் பங்கேற்று 200 கிலோவுக்கு மேல் நெகிழிப் பாட்டில்களை சேகரித்து, திருவாரூா் நகராட்சி சுகாதார அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பதிவாளா் பேராசிரியா் திருமுருகன், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், புவியியல் துறைத் தலைவா் முனைவா் பாலமுருகன் குரு, பூமிதின கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் செல்வராஜ் கந்தசாமிஉள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com