காச நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பாரதமாதா சேவை அமைப்பினா்.
காச நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பாரதமாதா சேவை அமைப்பினா்.

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கிள்ளிவளவன் தலைமை வகித்தாா். பாரதமாதா குடும்ப நல நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் முன்னிலை வகித்தாா்.

எடையூா் சுற்றுவட்டார பகுதிகளில் காச நோயால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு பேரிச்சம்பழம், கொண்டக்கடலை மற்றும் முட்டைகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் பாரதமாதா சேவை நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மருத்துவ அலுவலா் டாக்டா் பாலதண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மனோகரன், சுகாதார ஆய்வாளா்கள் பழனியப்பன், பால சண்முகம், வட்டார சிகிச்சை மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வன் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவாக, பாரதமாதா சேவை நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளா் துா்கா தேவி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com