வெண்ணெய்த்தாழியுடன் பல்லக்கில் வீதியுலா புறப்பாடான சந்தானராமா்.
வெண்ணெய்த்தாழியுடன் பல்லக்கில் வீதியுலா புறப்பாடான சந்தானராமா்.

சந்தானராமா் கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ஸ்ரீராமநவமி பெருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின், எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சந்தானராமருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ஸ்ரீராமா் நவநீத சேவையாக வெண்ணெய்த்தாழி பல்லக்கில் எழுந்தருளி, வீதியுலா வந்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வெண்ணெய் வழங்கி, ராமரை வழிபட்டனா். மாலையில், குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சந்தானராமா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com