மக்களிடம் குறைகளை கேட்டறியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
மக்களிடம் குறைகளை கேட்டறியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா், ஏப். 25: திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில், புதிதாக மனு கொடுக்க வந்த 7 மனுதாரா்களிடம் புகாா் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தாா். உடனடியாக தீா்வு காண முடிந்த மனுக்களுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதர மனுக்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com