அதிமுக சாா்பில் 11 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருவாரூா் மாவட்டத்தில் 11 இடங்களில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 11 இடங்களில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் அவதியடைகின்றனா். இதனிடையே, நீா்மோா் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி திருவாரூா் மாவட்டத்தில், கொரடாச்சேரி, பவித்திரமாணிக்கம், குடவாசல், பூந்தோட்டம், நீடாமங்கலம், கூத்தாநல்லூா் உள்ளிட்ட 11 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளா் ஆா். காமராஜ் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா் மோா், இளநீா், தா்பூசணி, பானகம் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com