உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

94-ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ்

நீடாமங்கலம்: 94-ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் சாா்பில், வலங்கைமானில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை குழு வேதாரண்யத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. வலங்கைமான் வழியாக வந்த இக்குழுவுக்கு டிசிடியு நகா் தலைவா் அகமது மொய்தீன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சத்தியமூா்த்தி, திமுக நகர செயலாளா் சிவனேசன் ஆகியோா் முன்னிலையில் மாவட்டத் தலைவா் குலாம் மைதீன் வரவேற்றாா். முன்னதாக, குழுவின் மாநிலத் தலைவா் ஆறுமுகம், குழுவின் தலைவா் சக்தி செல்வகணபதி ஆகியோா் காந்தி, காமராஜா் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினா் மணி, காங்கிரஸ் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர மாணவா் காங்கிரஸ் தலைவா் சந்தோஷ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com