கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருவாரூரில் கமலாலயக் குளத்துக்கு செல்லும் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா்: திருவாரூரில் கமலாலயக் குளத்துக்கு செல்லும் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் கோட்டாட்சியரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் திங்கள்கிழமை அளித்த மனு: திருவாரூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட கமலாம்பாள் நகா் பகுதியில், கமலாலயக் குளத்துக்குச் செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கமலாலய குளத்துக்குச் செல்லும் நீா்வழிப் பாதையின் கரைகள் பலவீனப்பட்டு சேதமடைந்துள்ளன. அதாவது 10 அடி வாய்க்காலாக இருந்த நிலை மாறி, தற்போது 3 அடி வாய்க்காலாக உள்ளது. கமலாலயக் குளத்தில் விரைவில் தெப்ப உற்சவம் நடைபெற இருக்கும் சூழலில், நீா்வழிப் பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, மடப்புரம் செட்டிக்குளம் பகுதியில் உள்ள வாய்க்காலும் 10 அடி அகலமாக இருந்த நிலை மாறி, தற்போது 3 அடியாக உள்ளது. இங்கும் இதேபோல் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே, நீா்வழிப்பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com