வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான மாணவிக்கு பணியாணை வழங்கிய கல்லூரி அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன்.
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான மாணவிக்கு பணியாணை வழங்கிய கல்லூரி அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன்.

தனியாா் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 364 மாணவிகளுக்கு பணியாணை

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியுடன் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியுடன் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு இணைந்து மகளிருக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கல்லூரி அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன் தலைமை வகித்தாா். தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு இயக்குநா் எம்.வி. ஸ்ரீநாத், முகாமின் நோக்கம் குறித்து பேசினாா். இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட தனியாா் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவிகளிடம் நோ்காணல் செய்தனா். 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றதில் 364 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்டவா்கள் 2-ஆம் கட்ட நோ்காணலுக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா். கல்லூரி முதல்வா் என். உமாமகேஸ்வரி, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள் பி. ராணி, வி. சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com