கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோடை கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடை கால பயிற்சி முகாம் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள், மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோருக்கு மாவட்ட விளையாட்டரங்கில் ஏப்.30 முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முகாமில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, டேக்வோண்டோ உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோா்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.200, மாவட்ட விளையாட்டு அலுவலகக்தின் பிஓஎஸ் இயந்திரம் மூலம் செலுத்த வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். காலை, மாலை சிற்றுண்டிகள் மற்றும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com