கொத்தங்குடி பகுதியில் தொடங்கிய ஐயனாா் கோயில் புனரமைப்புப் பணி.
கொத்தங்குடி பகுதியில் தொடங்கிய ஐயனாா் கோயில் புனரமைப்புப் பணி.

சிறைமீட்ட ஐயனாா் கோயில் புனரமைப்புப் பணி தொடக்கம்

திருவாரூா் அருகே சிறைமீட்ட ஐயனாா் கோயில் புனரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவாரூா் மாவட்டம், அம்மனூா் கொத்தங்குடி கிராமத்தின் எல்லை தெய்வதாக விளங்கும் ஐயனாா் கோயிலை சீரமைக்க முடிவெடுத்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் மட்டுமே காட்சியளித்த இடத்தில் தற்போது முன்மண்டபத்துடன் கூடிய வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர, பரிவாரத் தெய்வங்களுக்கும் திறந்தவெளி சந்நிதிகள் அமைக்கப்பட உள்ளன.

கோயில் பணிகள் அனைத்தும் கிராமத்து மக்களால் மட்டுமே செய்யப்பட்டு வருவதால், முதற்கட்டப் பணிகளுக்குப் பிறகு இடைவெளி விடப்பட்டது. மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, இரண்டாம் கட்டமாக கோயில் சீரமைப்புப் பணி தொடங்கியுள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞா்கள் பங்கேற்று மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com