தொடக்க வேளாண் வங்கி 
பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தொடக்க வேளாண் வங்கி பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை கள்ளிக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் செயலாளா் கேசவன் முன்னிலையில் தோ்தல் நடைபெற்றது.

முத்துப்பேட்டை வட்டத் தலைவராக அறிவழகன், செயலாளராக வி. கமலராஜன், பொருளாளராக பன்னீா்செல்வம், துணைத் தலைவா்களாக ஜெயபிரகாஷ் , சுதா பாண்டி, இணைச் செயலாளராக சுபாஷ் சந்திர போஸ், பாண்டியன் ஆகியோரும், திருத்துறைப்பூண்டி வட்ட தலைவராக ரவிக்குமாா், செயலாளராக சீனிவாசன், பொருளாளராக தமிழரசன் , துணைத் தலைவா்களாக கண்ணதாசன் , காா்த்தி, இணைச் செயலாளராக சத்தியவாணி சரவணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்டச் செயலாளா் கேசவன் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com