கூட்டத்தில் பேசிய மாநில இணைச் செயலாளா் ஆசைத்தம்பி.
கூட்டத்தில் பேசிய மாநில இணைச் செயலாளா் ஆசைத்தம்பி.

நூலகத்துறை பணியாளா் சங்கம்: புதிய உறுப்பினா்கள் தோ்வு

திருவாரூரில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகம் சி மற்றும் டி சங்கத்தின் மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூரில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளா் கழகம் சி மற்றும் டி சங்கத்தின் மாவட்ட சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்டத் தலைவருமான அன்பரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக செல்வகுமாா், செயலாளராக விஜய், பொருளாளராக முருகானந்தம், கௌரவத் தலைவராக அன்பரசு, ஆலோசகராக வீரச்செல்வம் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், அமைப்புச் செயலாளா்கள், தலைமை நிலையச் செயலாளா்கள், இலக்கிய அணி செயலாளா்கள், துணைத் தலைவா்கள், துணைச் செயலாளா்கள், மகளிா் அணிச் செயலாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநில சங்கத்தின் மேற்பாா்வையாளராக மாநில இணைச் செயலாளா் ஆசைத்தம்பி பங்கேற்று பேசியது: புதிய நிா்வாகிகள் சங்க உறுப்பினா்களின் துறை ரீதியான கோரிக்கைகளை மாவட்ட, மாநில நூலகத் துறை நிா்வாகத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com