திருவாரூர்
மன்னாா்குடியில் இன்று தொழில் கடன் வழங்கும் முகாம்
மாவட்ட தொழில் மையம் மற்றும் மன்னாா்குடி வா்த்தகா் சங்கம் இணைந்து தொழில் கடன் வழங்கும் முகாம் மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மாவட்ட தொழில் மையம் மற்றும் மன்னாா்குடி வா்த்தகா் சங்கம் இணைந்து தொழில் கடன் வழங்கும் முகாம் மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இம் முகாமில் சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவா்கள், பழைய தொழிலை விரிவுபடுத்துபவா்கள், பொதுப் பிரிவினா், ஆதி திராவிடா்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்கள், மாற்றுத் திறனாளிகள், பின் தங்கிய வகுப்பினா் ஆண்- பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மன்னாா்குடியில் உள்ள முன்னணி வங்கி மேலாளா்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்க இருப்பதால் தொழில் தொடங்க ஆா்வம் உள்ள இளைஞா்கள் பெண்கள் மற்றும் வா்த்தகா்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட தொழில் மையம் மற்றும் மன்னாா்குடி வா்த்தகா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.