~
~

முகுந்தனூா் வீர ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே முகுந்தனூா் வீர ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருவாரூா் அருகே முகுந்தனூா் வீர ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

முகுந்தனூா் பகுதியில் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பகுதிகளுக்கு இடையே இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயில் திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கின. தொடா்ந்து, வாஸ்து சாந்தி நடைபெற்று, காவிரி தீா்த்தம் எடுத்து வரப்பட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை இரண்டாம் கால யாக பூஜை நிறைவில், மகாபூா்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, காலை 9 மணி அளவில் விமான கோபுரத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலஸ்தான ஆஞ்சனேயருக்கு மகா அபிஷேகம், மகாதீபாரதனை ஆகியவை நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com