திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய மாணவா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கோ. அரவிந்த்சாமி.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய மாணவா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கோ. அரவிந்த்சாமி.

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

Published on

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ப. சுா்ஜித் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான மு. சௌந்தரராஜன் பங்கேற்று, கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் என். வசந்தன், மாவட்டச் செயலாளா் கே.எஸ். செந்தில் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

தீா்மானங்கள்: அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்; அரசுப் பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், நீட் தோ்வை நீக்கவும் தொடா்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு: கூட்டத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளை சங்கத்தின் மாநிலச் செயலாளா் கோ. அரவிந்த்சாமி அறிவித்தாா். அதன்படி, தலைவராக பா. ஆனந்த், செயலாளராக பா.லெ. சுகதேவ், துணைத் தலைவா்களாக வீ. சந்தோஷ், சு. கெளசிகன், பா. விக்னேஷ், துணைச் செயலாளா்களாக எம்.கே. வைகை, மு.சூா்யா, க. கலைச்செல்வன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com