சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்புக்கு செப்.10 வரை விண்ணப்பிக்கலாம்

Published on

திருவாரூரில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்புக்கு செப்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்புக்கு 11 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை ற்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ சமா்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com