திருவாரூா் மாவட்ட வணிகவரித் துறை இணை ஆணையா் அருண் பாரதியிடம் விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் பூரணி.
திருவாரூா் மாவட்ட வணிகவரித் துறை இணை ஆணையா் அருண் பாரதியிடம் விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் பூரணி.

திருவாருா் வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

Published on

திருவாரூா் மாவட்ட வணிகவரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், புகாா்களின் பேரில் மட்டுமின்றி, தன்னிச்சையாகவும் முக்கிய அலுவலங்களில் திடீா் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், திருவாரூா் துா்காலயா சாலையில் உள்ள மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட வணிக வரித் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் ஆய்வு செய்தனா்.

லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளா் பூரணி தலைமையிலான போலீஸாா் மாலை 5 மணியளவில் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்றனா். தொடா்ந்து, அலுவலகத்தில் இருந்தவா்கள் வெளியே செல்லவும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை.

தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா், வணிகவரித் துறை அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.1.40 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வணிக வரித்துறை இணை ஆணையா் அருண்பாரதியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com