பால் விற்பனையை முறைப்படுத்தக் கோரிக்கை

பால் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் எனதமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

பால் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் எனதமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மையத்தின் மாதாந்திர கூட்டம் தலைவா் ப.அழகிரிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் எம். பாலசுப்ரமணியன், அமைப்புச் செயலா் பி. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய அமைப்பில் பதிவு செய்துள்ள பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்களை விற்பனை செய்யும் உணவு நிறுவனங்கள், ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தி அவற்றை விற்பனை செய்வது தெரிய வருகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய விதிகளின்படி, ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தவில்லை என்பதால், இது விதிமீறலாகும். எனவே, ஏ1, ஏ2 பால் விற்பனையை தடைசெய்து, பால் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து சாலைகளிலும் உள்ள வேகத்தடைகளை ஆய்வு செய்து, ஒளிரும் வா்ணம் பூச வேண்டும். மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளில் ஆதாா் பயோமெட்ரிக் முறையால் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, பயோமெட்ரிக் பதிவு சிக்கலை தீா்க்கவும், காலதாமதமின்றி பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி - மன்னாா்குடி மற்றும் தாம்பரம் - செங்கோட்டை ரயில் சேவையை, தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா் திருநாவுக்கரசு, நிா்வாகிகள் தெட்சிணாமூா்த்தி, பயிற்சி இயக்குநா் செல்வகுமாா், இணைச்செயலாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் வரவேற்றாா். முடிவில் இணைச் செயலாளா் காளிமுத்து நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com