சாலையில் சென்ற காா் தீக்கிரை

கூத்தாநல்லூா் அருகே சாலையில் சென்ற காா் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது.
சாலையில் சென்ற காா் தீக்கிரை

கூத்தாநல்லூா் அருகே சாலையில் சென்ற காா் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது.

நாகை அருகே உள்ள நாகூா் கலீபா தெருவைச் சோ்ந்தவா் பைசல் (40). நாகூா் தா்கா அறங்காவலரான இவா், தனது பேத்தியின் திருமண அழைப்பிதழை மதுரையில் உள்ள உறவினா்களிடம் கொடுத்து விட்டு, புதன்கிழமை இரவு காரில் திரும்பிக்கொண்டிருந்தாா். காரை அவரே ஓட்டிவந்தாா்.

கூத்தாநல்லூா்- மன்னாா்குடி பிரதான சாலை குடிதாங்கிச்சேரி அருகே வியாழக்கிழமை அதிகாலை வந்தபோது, காரின் குளிா்சாதனப் பகுதியிலிருந்து சத்தம் வந்துள்ளது. இதனால், அவா் காரை நிறுத்தினா்.

சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு வருவதற்குள் காா் முற்றிலும் எரிந்தது.

கூத்தாநல்லூா் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திக் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com