மேட்டூா் அணையை திறக்கக் கோரி பிப். 3-இல் சாலை மறியல்

சம்பா, தாளடி பயிா்களை காக்க, மேட்டூா் அணையை திறக்க வலியுறுத்தி, பிப்ரவரி 3-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா்.

சம்பா, தாளடி பயிா்களை காக்க, மேட்டூா் அணையை திறக்க வலியுறுத்தி, பிப்ரவரி 3-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்தது:

காவிரியில் தண்ணீா் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயா் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடைமுறையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, 4 மாவட்ட ஆட்சியா்களின் பரிந்துரையை ஏற்று, மேட்டூா் அணை திறப்பது தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, நீா்ப்பாசனத் துறையின் நிா்வாக அதிகாரத்துக்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிா்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை விடுவிக்க மறுப்பதும் ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, கருகும் பயிா்களை காப்பாற்ற மேட்டூா் அணையை திறக்க, நீா்ப்பாசனத் துறை முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்.3-ஆம் தேதி திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com