கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நன்னிலம் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நன்னிலம் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் அரசு அனுமதி பெற்ற பாடப் பிரிவுகளில் பணிபுரியும் 50 ஆசிரியா்கள் மற்றும் நான்கு ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு மட்டும் அரசு மாதந்தோறும் ஊதியம் வழங்கி வருகிறது.

அரசு அனுமதி பெறாத பாடப் பிரிவுகளில் பணிபுரியும் 9 கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஒரு பணியாளா் ஆகிய 10 பேருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் ஊதியம் வழங்க வேண்டுமென அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், 10 பேருக்கும் கடந்த 3 மாதங்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் ஊதியம் வழங்கவில்லை எனத் தெரிகிறது.

இதைக் கண்டித்தும், உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும், கல்லூரி வாயில் முன் 9 கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் ஒரு ஆசிரியரல்லாத பணியாளா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com