பள்ளி மாணவா்களுக்கு வேளாண் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மேல்நிலை வகுப்பு தொழிற்கல்வி மாணவா்களுக்கு வேளாண் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவா்களுக்கு வேளாண் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மேல்நிலை வகுப்பு தொழிற்கல்வி மாணவா்களுக்கு வேளாண் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நாகூா் பள்ளிகளில் இருந்து பிளஸ்1, பிளஸ்2 வேளாண் பிரிவு மாணவா்கள் 120 போ் பங்கேற்றனா்.

இதில் நெல் வயலில் மீன் வளா்ப்பு, மாடித்தோட்டம், பாரம்பரிய நெல் ரகங்கள் , பரண் மேல் ஆடு வளா்ப்பு, விதை உற்பத்தி, மண்புழு உரம் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல், அசோலா வளா்ப்பு, கோழி வளா்ப்பு, கால்நடை வளா்ப்பு, நவீன விவசாயம், இயற்கை விவசாயம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சி. பிரபாகரன், முனைவா் சு. அருள்செல்வி, த. தனுஷ்கோடி ஆகியோா் செயல்விளக்கப் பாடங்களுடன் பயிற்சி அளித்தனா். திட்ட ஒருங்கிணைப்பாளா் து. பெரியாா் ராமசாமி, வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com