அரசுப் பள்ளி முப்பெரும் விழா

கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 43-ஆம் ஆண்டு விழா, பாரதியாா் இலக்கிய மன்ற நிறைவு விழா, தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 43-ஆம் ஆண்டு விழா, பாரதியாா் இலக்கிய மன்ற நிறைவு விழா, தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் (பொ) மு. விஜயதீபா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ. மஞ்சுளா, ஊராட்சித் தலைவா் கே.ஜி. ஆனந்தன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். ரமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவருமான மு. மணிமேகலை குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா்.

புத்தகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ. கலைச்செல்வன் ‘நிற்க அதற்கு தக’ என்ற தலைப்பிலும், கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வி.சஞ்சய், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஒற்றுமையே பலம்’ என்ற தலைப்பில் பேசினா்.

தொடா்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், விடுப்பு எடுக்காமல் வருகை தந்த மாணவிகளுக்கும், பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, கணித ஆசிரியா் பி. ரவிக்குமாா் வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி தமிழாசிரியா் பெ. சித்திரவல்லி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com