இளையோா் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

நன்னிலம் அருகே வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், செஞ்சிலுவை சங்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டவா்கள்.
நிகழ்வில், செஞ்சிலுவை சங்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டவா்கள்.

நன்னிலம் அருகே வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளா் செந்தில்குமாா், தொகுதி ஒருங்கிணைப்பாளா் தீபன் ஆகியோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினா். தொடா்ந்து, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், பயிற்சியும் நடைபெற்றன.

செஞ்சிலுவை சங்க செய்தி தொடா்பாளா் வென்சி க்ளாடியா மேரி, ஆலோசகா் தேவி, சாரண- சாரணியா் இயக்கத்தின் பொறுப்பாசிரியா்கள் கலைவாணி, பாலாம்பிகை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com