ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

மன்னாா்குடியில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

மன்னாா்குடியில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.

மன்னாா்குடியை அடுத்த நெருஞ்சனடி பிரதானசாலையை சோ்ந்த மாறன் மகன் ராம்சிங் (26). கோவையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு குடும்பப் பிரச்னை காரணமாக பெற்றோா்களுடன் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினாராம்.

இந்நிலையில், மன்னாா்குடியை அடுத்த குறுவைமொழி பகுதியில் மன்னாா்குடி நோக்கி வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து ராம்சிங் தற்கொலை செய்துகொண்டாராம். மன்னாா்குடி ஊரக போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தஞ்சை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com