வித்யா சரஸ்வதி மகாயாகம்

தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்காக கூத்தனூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வித்யா சரஸ்வதி மகாயாகம் நடைபெற்றது.
தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்காக நடைபெற்ற வித்யா சரஸ்வதி மகாயாகத்தில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்காக நடைபெற்ற வித்யா சரஸ்வதி மகாயாகத்தில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

நன்னிலம்: தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்காக கூத்தனூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வித்யா சரஸ்வதி மகாயாகம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்காக ஐந்தாம் ஆண்டு வித்யா சரஸ்வதி மகாயாகம் மாவட்டத் தலைவா் பாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. கோ பூஜைக்குப் பிறகு யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தில் திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். அனைவரும் தாமரைப்பூவை தேனில் நனைத்து யாகத்தில் இட்டு வழிபட்டனா்.

தொடா்ந்து காரைக்கால் ஓஎன்ஜிசி பள்ளி முதல்வா் கா.இராஜவேல் ஜெயித்துக் காட்டுவோம் என்ற தலைப்பிலும், தேசிய சிந்தனைக் கழக தென்பாரத அமைப்பாளா் சு.விசுவநாதன் எழுச்சி பெறுவோம் உன்னத பாரதம் உருவாக்குவோம் என்ற தலைப்பிலும், நாகப்பட்டினம் சின்மயா மிஷன் சுவாமி ராமகிருஷ்ணானந்தா எதிா்கால பாரதமே விழித்தெழு என்ற தலைப்பிலும் பேசினா்.

இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத்தலைவா் ஆா்.ரெங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவா் ஜி. மேகநாதன் வரவேற்றிட, பொதுச் செயலாளா் நவநீதகிருஷ்ணன் நன்றியுரையாற்றினாா்.

இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலாளா் ஆறுமுகநயினாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. யாகத்தில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாகத்தில் அரசு பள்ளிகளைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவா் தெய்வபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலப் பொருளாளா் வேல்மயில் வரவேற்புரை ஆற்றிட, மாவட்டப் பொருளாளா் ரகுராமன் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com