சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூரில் சாலையோர வியாபார தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.

திருவாரூா்: சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூரில் சாலையோர வியாபார தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தை மாவட்டம் முழுவதும் அமல்படுத்த வேண்டும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச் சான்று, ஸ்மாா்ட் காா்டு, அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், தெருவியாபாரிகள், தங்களின் பொருள்களை இரவில் பாதுகாப்புடன் வைக்க இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் எம். பாா்த்திபன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன், சாலையோர வியாபாரிகள் சங்க நகரச் செயலாளா் எஸ். செல்வம், நகரத் தலைவா் வீ. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com