புதுமண தம்பதி வீட்டில் 46 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் பணம் திருட்டு

மன்னாா்குடி அருகே புதுமண தம்பதியின் வீட்டின்கதவை உடைத்து 46 பவுன் நகை, ரூ. 2.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
புதுமண தம்பதி வீட்டில் 46 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் பணம் திருட்டு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே புதுமண தம்பதியின் வீட்டின்கதவை உடைத்து 46 பவுன் நகை, ரூ. 2.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மன்னாா்குடி மேலவாசல் குமரபுரத்தைச் சோ்ந்தவா் வீரப்பன் மகன் கோவிந்தராஜ் (28). இவா், மன்னாா்குடியில் வேளாண் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், காளாஞ்சிமேட்டை சோ்ந்த கிருத்திகாவுக்கும் பிப்.1-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், மேலவாசல் குமரபுரத்தில் தஞ்சை பிரதான சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனமாக இருந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோவிந்தராஜ், கிருத்திகாவை காளாஞ்சிமேட்டில் அவரது தாயாா் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றவா் மாலையில் கிருத்திகாவை அழைத்துக்கொண்டு குமரபுரம் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உள்ளே இருந்த 2 பீரோக்களை உடைத்து பொருள் சிதறிகிடந்ததுடன் அதில் வைக்கப்பட்டிருந்த 46 பவுன் நகை, ரூ. 2.50 லட்சம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், அங்குவந்த டிஎஸ்பி அ. அஸ்வத் ஆண்டோ, காவல் ஆய்வாளா் கரிகாற்சோழன் ஆகியோா் பாா்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com