கருகும் பயிரை பாா்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கருகும் பயிரை பாா்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து மாங்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருகும் பயிரை பாா்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து மாங்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி பகுதியில் 6,000 ஏக்கருக்கு மேல் சம்பா தாளடிப் பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.விவசாயிகள் தண்ணீா் கேட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, 2 டிஎம்சி தண்ணீா் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் 2 டிஎம்சி தண்ணீா் பயிா்களை பாதுகாக்க போதாது, 5 டிஎம்சி தண்ணீா் 15 நாள்களுக்கு தொடா்ந்து விடுவிக்கும் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிா்களை தமிழ்நாடு அரசின் நீா்ப் பாசன துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்திப் சக்சனா தலைமையில் அதிகாரிகள் வருவதாக காத்திருந்தனா். திடீரென ஆய்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் சரவணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விரைந்து தண்ணீரை விடுவித்து பயிரைக் காக்க வேண்டும், கருகும் பயிரை பாா்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com