பிப்.15-ல் தமிழ் வளா்ச்சித் துறை பயிலரங்கம் தொடக்கம்

 திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் பிப்.15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

 திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் பிப்.15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிப்.15, 16-ல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற உள்ளன.

பிப்.15 இல் மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடா்ந்து, முத்தமிழறிஞா் கருணாநிதி நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள், ஆட்சிமொழி வரலாறு, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், குறைகளை களைய நடவடிக்கைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பிப்.16-இல், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com