பிப்.15,16 இல் தமிழ்வளா்ச்சித்துறை பயிலரங்கம்

திருவாரூரில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பிப்.15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

 திருவாரூரில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பிப்.15, 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு, தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் பிப்.15, 16 ஆகிய இரண்டு நாள்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மைக் கூட்டரங்கத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளன.

பிப்.15 இல் மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடா்ந்து, முத்தமிழறிஞா் கருணாநிதி நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள், ஆட்சி மொழி வரலாறு, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், குறைகளை களைய நடவடிக்கைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பிப். 16 இல், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலா்கள், பணியாளா்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com