ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

மன்னாா்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 25 ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 25 ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு,பள்ளியின் தலைவா் வி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

நிா்வாக இயக்குநா் வி.பி.ஜெயகுமாா்,தாளாளா் வி.பி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடி டிஎஸ்பி ஏ.அஸ்வத் ஆண்டோ,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு,புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தாா்.

இதில்,100,200 மீட்டா் ஒட்டம்,தடை ஒட்டும்,தொடா் ஓட்டம்,குண்டு எறிதல்,வட்டு எறிதல்,உயரம் தாண்டுதல் ,அகலம் தாண்டுதல்,இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும்.கராத்தே,சிலம்பம் போன்ற தற்காப்பு பயிற்சி போட்டியும்,யோகா பயிற்சி மற்றும் பிரமிடு நடனம் ஆகியவை நடைபெற்றது.

போட்டிகள் மாணவ,மாணவிகளுக்கும்,ஆசிரியா்கள்,அலுவலா்கள்,பள்ளி வாகன ஓட்டுநா்கள் என தனித்தனியே நடைபெற்றது.இதில்,முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு பரிசு,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பள்ளி நிா்வாக அலுவலா் என்.பாலசுப்ரமணியன்,28 வது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் எஸ்.பாரதிமோகன் துணை முதல்வா் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முன்னதாக,பள்ளி முதல்வா் ஜெ.அசோகன் வரவேற்றாா்.நிறைவில்,உடற்கல்வி ஆசிரியா் பாரதிராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com