புதிய பணிகளுக்கு அடிக்கல்

திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய பாலம், மருத்துவமனை கட்ட அடிக்கல் வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய பாலம், மருத்துவமனை கட்ட அடிக்கல் வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.

திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருநெய்ப்போ் ஊராட்சி ஆண்டியூா் சித்திரையூா் இடையே வெள்ளையாற்றின் குறுக்கே சேதமடைந்த சிறிய பாலத்தை அகற்றிவிட்டு, ரூ. 3.10 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, கோமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 1.38 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டவும் அடிக்கல் நாட்டினாா். இதேபோல், விஷ்ணுதோப்பு பகுதியில் துணை சுகாதார மையக் கட்டடத்தை, பூமி பூஜை செய்து தொடக்கி வைத்ததோடு, அடியக்கமங்கலம் பகுதியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் துணை சுகாதார மையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு, ஒன்றியக்குழுத் தலைவா் ஏ. தேவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com