‘கேள்வி கேட்கும் பழக்கத்தை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’

கேள்வி கேட்டும் பழக்கத்தை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். மோகனசுந்தரம்.
‘கேள்வி கேட்கும் பழக்கத்தை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’

கேள்வி கேட்டும் பழக்கத்தை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். மோகனசுந்தரம்.

மன்னாா்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பங்கேற்று பேசியது:

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை வேறு எவருடனும் ஒப்பிட்டு, வளா்க்கக்கூடாது; அது அவா்களின் வளா்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிடும். மாணவா்கள் தங்களின் எதிா்கால லட்சியத்தை அடைய, தோல்வி பற்றி துயரம் கொள்ளாது, தங்களது சிந்தனை செயலை ஓயாத உழைப்புடன் இணைத்து தொடா்ந்து முன்னேறினால் வெற்றி நிச்சயம். இதற்கு பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் கூட்டு முயற்சி அவசியம்.

மாணவா்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளத்துக் கொள்ளவேண்டும். மனதில் உள்ள பயத்தை நீக்க ஆசிரியா்கள்,பெற்றோா்களிடம் , அதற்கான விளக்கத்தைக் கேட்டு, தெளிவு பெறவேண்டும் என்றாா்.

விழாவிற்கு, பள்ளித் தலைவா் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிா்வாக அறங்காவலா் வி.பி. ஜெயக்குமாா், தாளாளா் வி.பி. சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மழலையா் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்த ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்கள் பாராட்டப்பட்டனா். கலை, அறிவியல், விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்,தொழிலதிபா்கள் மேலத்திருப்பாலக்குடி மணியன், தம்பிக்கோட்டை ரமேஷ், லயன்ஸ் சங்க மாவட்ட நிா்வாகி மருத்துவா் எஸ். தா்மராஜன், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் பி. பினாகபாணி, முன்னாள் டிஎஸ்பி சிவபாஸ்கா், மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் கல்வி அலுவலா் எஸ். மாயகிருஷ்ணன், மன்னாா்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் த. சீனிவாசன், நம்மங்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி முதல்வா் ஜெ. அசோகன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். முன்னதாக, நிா்வாக அலுவலா் என். பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவாக, துணை முதல்வா் சி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com