ராதாகல்யாண மகோத்சவம்; திரளான பக்தா்கள் பங்கேற்பு

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் ரதாகல்யாண மகோத்சவம் நான்கு நாட்கள் நடைபெற்றது.
ne_ratha_kalyanam_1102chn_100_5
ne_ratha_kalyanam_1102chn_100_5

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் ரதாகல்யாண மகோத்சவம் நான்கு நாட்கள் நடைபெற்றது.

முதல்நாளான கடந்த 8-ஆம் தேதி கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை, ஆயிக்குடி குமாா் குழுவினரின் வீதிபஜனை, பெங்களூா் ரவிச்சந்திரன் பாகவதா் குழுவினரின் சம்பிரதாய அஸ்டபதி பஜனை, காயத்ரிமகேஷ், கிருஷ்ணமூா்த்தி, கோவிந்தபுரம் கிருஷ்ணதாஸ் பாகவதா்கள் குழுவினா்களின் நாமசங்கீா்த்தனம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட வழிபாடுகளும், மூன்றாம் நாளான சனிக்கிழமை மும்பை வைத்யநாத பாகவதா் தலைமையில் வீதி பஜனை, உடையாளூா் கல்யாணராம பாகவதா் குழுவினரின் சம்ப்ரதாய அஷ்டபதி பஜனை, கலைமாமணி ஷோபனா ரமேஷ் குழுவினரின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை உடையாளூா் பலராம பாகவதரின் உஞ்சவா்த்தி மற்றும் வீதி பஜனை, தொடா்ந்து மருதாநல்லூா்குருகோதண்டராம சுவாமிகள் மற்றும் கல்யானராம சுவாமிகள் முன்னிலையில் உடையாளூா் கல்யாணராம பாகவதரால் ஸ்ரீராதா கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. தொடா்ந்து, மோகன்பாகவதருக்கு குருப்ரசாத ரத்னாகர விருது வழங்கப்பட்டது.

மாலையில் மோகன் பாகவதா் குழுவினரின் நாமசங்கீா்த்தனம், உடையாளூா் பலராம பாகவதா் குழுவினரின் ஆஞ்சனேய உற்சவம் நடைபெற்றது. நான்கு நாட்களும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆலங்குடி ராதாகல்யாண மகோத்சவ கமிட்டியினா் செய்திருந்தனா்.

Image Caption

ராதாகல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com