தென்புலியூா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே தென்புலியூா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்புலியூா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகே தென்புலியூா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தாலுகா, வெள்ளக்குடியை அடுத்த தென்புலியூா் பகுதியில் அருள்மிகு சேவராஜமூா்த்தி ஐயனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.

யாகாசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித தீா்த்த கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இந்த கடங்கள், கோபுர விமானக் கலசங்களை அடைந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, கோபுர விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com