பனகல் சாலை பூங்கா திறப்பு

திருவாரூா் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பனகல் சாலை பூங்கா திறப்பு

திருவாரூா் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்கா கலைஞா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 41 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, அந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் மணிமண்டபத்தில், மனுநீதிச் சோழனின் திருவுருவச் சிலைக்கு, அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், திமுக நகரச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com