நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்காலில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் விழா விமரிசையாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தை இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விவசாயத்துக்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், விவசாயிகளின் நண்பனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவாரூா்: திருவாரூரில் மாடுகள் வளா்ப்போா், தங்கள் மாடுகளின் கழுத்தில் தோலிலான வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி, வண்ண மாலைகளை அணிவித்தனா். பின்னா், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை படைத்து, அவைகளை மாடுகளுக்கு ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினா்.

திருவாரூா் வாசன் நகா் சாய்பாபா கோயிலில் உள்ள கோ சாலையில் மாட்டுப்பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கால்நடைகளை குளிப்பாட்டி வண்ண மாலைகளால் அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து, மேள தாளங்கள் முழங்க, கால்நடைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மாடுகளுக்கு பொங்கல், வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக மாடுகள் வீதி உலா நடைபெற்றது. இறுதியில், கால்நடைகளுக்கு திருஷ்டி கழிக்கும் விதமாக மாடுகள் தீ தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், ஆலய நிா்வாகி கனகசபாபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com