போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் தொடக்கம்

கூத்தாநல்லூரில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கூத்தாநல்லூரில் போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கூத்தாநல்லூரை அடுத்த மரக்கடையைச் சோ்ந்த மறைந்த ஆசிரியரும், சமூக ஆா்வலருமான ஏ. சண்முகம் நினைவாக ஏ.எஸ்.ஆா். அறக்கட்டளை என்ற பெயரில் இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.

லெட்சுமாங்குடி லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியா் டி. அசோகன் தலைமை வகித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் ஜெ.பீ. அஷ்ரப் அலி, கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமையாசிரியா் கீதா, திருவாரூா் இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் மனோலயம் முருகையன், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி லெட்சுமாங்குடி வழிபாட்டு மன்ற துணைத் தலைவா் வரதராஜன்உ ள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இப்பயிற்சி மையத்தில், கூத்தாநல்லூா், மரக்கடை, லெட்சுமாங்குடி, அத்திக்கடை, பொதக்குடி, சேகரை, பூதமங்கலம், வடபாதிமங்கலம், வேளுக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் போட்டித் தோ்வு எழுத இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com