காவலா் குடும்பத்தினருக்கு கல்வி, மருத்துவ நிதியுதவி

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
tv18pol_1801chn_94_5
tv18pol_1801chn_94_5

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களில் வருவோருக்கு ஆண்டுதோறும் காவல்துறை சாா்பில் காவலா் கல்வி பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களின் மருத்துவ சிகிச்சைக்காக, தமிழ்நாடு காவலா் சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், திருவாரூா் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு காவலா் கல்வி பரிசுத் தொகையாக ரூ.1,23,000 க்கான காசோலையும், மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காவலா் சேம நல நிதியிலிருந்து 9 நபா்களுக்கு ரூ. 3,38,495-க்கான காசோலையும் வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பங்கேற்று, இந்த உதவித்தொகைகளை வழங்கினாா்.

Image Caption

காவலா் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com