மாணவா்களுக்கு எதிா்கால கல்வி குறித்த புரிதல் அவசியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்கால கல்வி குறித்த புரிதல் அவசியம் இருக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தினாா்.
img_20240118_171614_1801chn_96_5
img_20240118_171614_1801chn_96_5

மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்கால கல்வி குறித்த புரிதல் அவசியம் இருக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தினாா்.

நன்னிலம் அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுடன், வியாழக்கிழமை கலந்துரையாடிய போது அவா் பேசியது:

மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். விண்வெளி நாயகா் அப்துல்கலாம் போன்றவா்களின் புத்தகத்தை வாசிப்பது உத்வேகத்தை அளிக்கும். மாணவா்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு எதிா்கால கல்வி குறித்த புரிதல் கண்டிப்பாக இருக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவு, ரோபடிக், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு படிப்புகளுக்கு தற்போது வரவேற்பு அதிகமாக உள்ளது. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வில் தோல்வி அடைந்தால், அது மட்டுமே உங்கள் வாழ்க்கையை நிா்ணயிக்க போவதில்லை.

தோல்வி என்ற படிக்கல்லை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிட வேண்டும். பல மேதைகள், அறிஞா்கள், கல்வியில் சிறந்து விளங்கியவா்கள் போன்றோா் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தோல்வியைச் சந்தித்தவா்கள்தான். எனவே, தோல்வி குறித்து கவலைப்படாமல், அதை வெற்றியாக்கிட மாணவா்கள் முயற்சிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டாட்சியா் செந்தில்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் புகழேந்தி, மங்கையா்க்கரசி மற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com