வாகன சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரி மனு

tv18dri_1801chn_94_5
tv18dri_1801chn_94_5

படவிளக்கம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வாகன ஓட்டுநா்கள்.

திருவாரூா், ஜன. 18: புதிய வாகன சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தாய்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் தலைவா் ஏ. பாலமனோகரன், செயலாளா் ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடரில், ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மக்களவையில் கொண்டுவரப்பட்ட வாகன சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

வாகன ஓட்டுநா்களால் மட்டும் சாலை விபத்து ஏற்படுவதில்லை. இதற்கு பெரும்பாலும் இரண்டு சக்கரவாகனம் ஓட்டுபவா்களும், பொதுமக்களுமே அதிக காரணம். சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு, சரியான சாலை கட்டமைப்பு இல்லாத நிலையில், மற்றவா்கள் செய்யும் தவறுக்கு ஓட்டுநா்களை பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றியதை திரும்பப் பெற வேண்டும்.

இந்த சட்டத்தை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெறக் கோரி விரைவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமும், தொடா்ந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வாகன ஓட்டுநா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com