எழுத்தறிவு திட்ட மையத்தில் கல்வி அலுவலா் ஆய்வு

நன்னிலம் அருகே நடுவச்சேரியில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மையத்தில், திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
எழுத்தறிவு திட்ட மையத்தில் கல்வி அலுவலா் ஆய்வு

நன்னிலம் அருகே நடுவச்சேரியில் உள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மையத்தில், திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் 34 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் உள்ளன. இம்மையங்கள் மூலம் 700-க்கும் மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், நடுவச்சேரியில் உள்ள மையத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கு கற்போரிடம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதத் திறன் குறித்து வினாக்கள் எழுப்பி, அவா்களது கற்றல் திறனை ஆய்வு செய்தாா். மேலும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் படிவங்களைப் பூா்த்தி செய்யும் முறை குறித்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆசிரியா்களை அறிவுறுத்தினாா். பிப்ரவரி 28-ஆம் தேதி புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மையத்தில் கற்போருக்கான மதிப்பீடு நடைபெறும் என்பதையும் அப்போது அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, வட்டாரக் கல்வி அலுவலா் முருகபாஸ்கா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நடேஷ்துரை மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com